அனர்த்தத்தை அதிஞ்சிய அர்ப்பணிப்பு - மலையக தீவிபத்தில் நிவாரண உதவி!
அழிவினவைநீக்கி ஆறுய்த்து அழிவின்கண் அல்லல் உழப்பதாம் நட்பு.”
கடந்த 2021 ம் ஆண்டு ஆவணிமாதம் 10ம் திகதி, தலவாக்கலைக்கு அருகிலுள்ள பம்பரகலை தோட்டத்தில் ஏற்பட்ட எதிர்பாராத தீவிபத்து, அங்கிருந்த 25 குடும்பங்களை முழுமையாக பாதித்து, அவர்கள் வாழ்வாதாரத்திற்கே பாதிப்பை ஏற்படுத்தியது. இந்த துயரமான சூழ்நிலையில், நமது புதிய வாழ்வு நிறுவனத்தின் மாணவப்பிரதிநிதிகள் சம்பந்தப்பட்ட பகுதியில் நேரில் சென்று பாதிக்கப்பட்ட மக்களுடன் தங்கி, அவர்களின் நிலைமைகளை கவனித்து, தேவையான உதவிகளை செய்தனர்.
அத்தியாவசியப் பொருட்கள் வழங்கி, தோட்டங்களில் இருந்து மரக்கறிகளை திரட்டியும் மக்களுக்கு நேரடி உதவிகள் வழங்கப்பட்டது.