வட்டக்கச்சி - கறுப்பிக்குள கிராம மாலைநேரக்கல்விகூடம்..

வட்டக்கச்சியை அண்மித்துள்ள கறுப்பிக்குள கிராம மக்களின் வேண்டுகோளுக்கு இணங்க , இலவச மாலைநேரக்கல்வியினை 01/02/2020 அன்று ஆரம்பித்து வைத்துள்ளோம். இந்த கறுப்பிகுள மக்களில் பெரும்பாலானோர் வறுமைக்கோட்டுக்குக்கீழ் உள்ளவர்கள்ஆவர் . இங்குள்ள மாணவர்கள் 2 அல்லது 3 கிலோமீற்றர் சென்றே , தமது அறிவை வளர்க்கக்கூடிய மிக இக்கட்டான நிலையில் இருக்கின்றளர் ,எனவே இவ்வாறான 75 மாணவர்களுக்கு கல்வி உதவியை செய்வதற்கு நாம் முன்வந்துள்ளோம். எதிர்கால சந்ததிக்கு நல்லதொரு கல்வி அத்திவாரத்தை போடவேண்டியது எமது கடமை , அந்த வகையில் மிகவும் பின்தங்கி உள்ள கிராமங்களை தெரிவு செய்து இவ்வாறான இலவச கல்வி சேவையை வளங்க நாம் தீர்மானித்துள்ளோம்..




Powered by Blogger.