கறுப்பிக்குள மாணவர்களின் மாலைநேர இலவசக்கல்விகூடம்.
மிகவும் பின்தங்கிய நிலையில் இருக்கும் கறுப்பிக்குள மாணவர்களின் நன்மைகருதி , எமது நிறுவனத்தால் ஆரம்பித்துவைக்கப்பட்டுள்ள மாலைநேர இலவசக்கல்விக்கு மிகவும் ஆர்வத்துடனும் ஆவலுடனும் வந்து ஆரவாரம் செய்யும் மழலைகள், எமது நிறுவனத்தின் இந்த சேவையானது பாதிக்கப்பட்ட பின்தங்கிய நிலையில் உள்ள கிராமங்களுக்கு சென்றடைய வேண்டுமென ஆசிரியர்களும், பெற்றோர்களும் அன்புடனும் உரிமையுடனும் கேட்டுக்கொண்டனர்.
கல்வியோடு சேர்த்து, கலை, விழையாட்டு என்பவற்றிலும் மாணவர்களுக்கு ஊக்கமளிக்க திட்டமிட்டுள்ளோம் என்பதை மிகுந்த ஆனந்தத்துடன் அறியத்தருகின்றோம்..