ஊக்கமூட்டும் புதிய வாழ்க்கை திட்டம் - சிறப்பான துவக்கத்துடன் சமூக நலன் நோக்கி ஒரு பாதை
"காலத்தினால் செய்த நன்றி சிறிதெனினும் ஞாலத்தின் மாணப் பெரிது" என்ற ஆதரவின் அடிப்படையில், திரு. ஐயாத்துரை சிவசாமி ஆசிரியர் அவர்களின் சுயதொழில் ஊக்குவிப்புத் திட்டம், New Life Foundation மூலமாக துவங்கப்பட்டுள்ளது. முதலாவது பயனாளியாக திருகோணமலையில் மூன்று குழந்தைகளைக் கொண்ட புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு, கோழிக்கூடுகள், குஞ்சுகள், மற்றும் தேவையான பொருட்கள் வழங்கப்பட்டன.