“ வீட்டுக்கு ஒரு பனை “ எனும் தொனிப்பொருளில் பனை நடுகை மற்றும் ஒன்றுகூடி உணவருந்தல்.
“ தினைத்துணை நன்றி செயினும் பனைத்துணையாக் கொள்வர் பயன் தெரிவார் “
பனைமரத்தை தமிழ் மரம் என அழப்பதும் உண்டு, தமிழர்களின் வாழ்வோடும் தமிழோடும் பின்னிப்பிணைந்தது என்பதற்குச் சான்றாக, சங்ககால நூல்களான தொல்காப்பியம், திருக்குறள், சிலப்பதிகார நூல்களின் பனையின் சிறப்பு குறிப்பிடப்பட்டுள்ளதை நாம் காணலாம். பனை ஓலைச்சுவடிகள் மூலமே எமக்கு பல இலக்கியங்கள் கிடைத்தன என்பது இதற்கு சான்றாகும்..
பனைமரமானது 100 அடி உயரம், என்பதோடு 100 வருடம் வாழும் என்பதும் அனைவரும் அறிந்ததே , ஆனால் எம்மில் பலர் அறிந்திராத விடயமானது, பனையின் உயரத்தைபோன்று, 4 இல் இருந்து 6 மடங்கு வரை நீளமான வேர்கள் செங்குத்தாக நிலத்தை துளைத்து செல்லும் என்பதும் , மழைகாலத்தில் நீரை உறிஞ்சி தன்னகத்தே வைத்து பருமனாவதும், பின்னர் வெய்யில் காலத்தில், தன்னை சுருக்கி நிலத்தை ஈரமாகவைத்திருக்கக்கூடிய அற்புதத்தைகொண்ட கற்பகதருவே இந்த பனைமரம் என்பதாகும்,
அதுமட்டுமல்லாது பனை இலைகளின் சிறப்பானது போகம் தவறாது மழைதரக்கூடிய வல்லமைகொண்டது, மற்றும் பலதோய்களுக்கு அருமருந்தாக இருக்கும் இந்த பனையை அழிய விடுவதும், எம் இனத்தை அழிப்பதும் ஒன்றே... எனவே ஒரு சதம் செலவில்லாமல் எதர்காலத்துக்கு இந்த சொத்தை விதைத்துசெல்லுங்கள். எமது மாணவர்கள் உங்களிடம் கேட்பது,
“ வீட்டுக்கு ஒரு பனை “ நடுகை செய்வதோடு மட்டுமல்லலாது, உனது, எனது என்று இல்லாது வெறுமையாக இருக்கும் காணிகளிலும் இடையூறு இல்லாது, பனைவிதைகளை விதைத்து , எதிர்காலச்சந்ததிக்கு விலைமதிப்பற்ற பனைமுதலீட்டை செய்யுங்கள் என்றே கேட்டு நிற்கின்றனர்...