புதிய வாழ்வு நிறுவனத்தின் சுயதொழில் ஊக்குவிப்புதிட்டத்தின்கீழ் 2021 ல் பயன்பெற்ற முயற்சியாளர்கள்
புதிய வாழ்வு நிறுவனத்தின் சுயதொழில் ஊக்குவிப்புதிட்டத்தின்கீழ் 2021 ல் பயன்பெற்ற முயற்சியாளர்கள் முறையே
1) இ. இராதாகிருஸ்ணன் பரந்தன் (நடமாடும் சிற்றூண்டி கடை)
2) அ.சிவநாதன் புதுக்குடியிருப்பு (பசுமாடு )
இறுதிப்போரில் தாய், தந்தையை இழந்து தாத்தாவின் ஆதரவில் மட்டுமே இருக்கும் இரு குழந்தைகளின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு, புதிய வாழ்வு நிறுவனத்தின் சுயதொழில் ஊக்குவிப்புத்திட்டத்தின்கீழ், திரு.இ. இராதாகிருஸ்ணன்
அவர்களுக்கு நடமாடும் சிற்றூண்டி கடை ஒன்று வழங்கப்ட்டதுடன் ,பரந்தனில் வசிக்கும் திரு. அ. சிவநாதன் அவர்களின் மகளின் கல்விக்கு கைகொடுக்குமுகமாக அவர் கேட்டுக்கொண்டதற்கு இணங்க பசுமாடு ஒன்றும் வழங்கப்பட்டது, இச்செயல் திட்டத்திற்கான நிதியுதவியினை, கனடாவில் இயங்கும் "ஏழு அறக்கட்டளை" அமைப்பினரால், அவ்வமைப்பின் நிர்வாக இயக்குநர்களில் ஒருவரான திரு.குருநாதன் மனோகரன் அவர்களின் நினைவாக வழங்கப்பட்ட்து.இத்திட்டத்திற்கு உதவியதன் மூலம் இரண்டு குடும்பங்களிற்கு வழிகாட்டிய “ ஏழு அறக்கட்டளை” அமைப்பினரிற்கு இதயபூர்வ நன்றிகளைத்தெரிவித்துக்கவள்வதுடன், இத்திட்டத்திற்காக நடமாடும் வண்டிலை அழகாக வடிவமைத்துத்தந்த எமது நிறுவனத்தின் பொறியியலாளர்களுக்கும் மனமார்ந்த நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெருவித்துக்கொள்கின்றோம்.