எமது நிறுவனத்தின் பொறியியல், தொழில்நுட்பவியல் இளைஞர்களின் ஒன்றிணைந்த முயற்சியில் இயந்திரங்கள் உருவாக்கம்.

 “ அருமை உடைத்தென்று அசாவாமை வேண்டும்

பெருமை முயற்சி தரும்.”
எமது நிறுவனத்தின் பொறியியல், தொழில்நுட்பவியல் இளைஞர்களின் ஒன்றிணைந்த முயற்சியில் இரண்டு இயந்திரங்கள் உருவாக்பட்டுள்ளன.
1) கிழங்குகள் வெட்டும் இயந்திரம்( மரவள்ளி / உருளை)
2) விதை கச்சான் உடைக்கும் இயந்திரம்
மேலும் சில இயந்திரங்களை வடிவமைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். அவர்களின் திறமையை பாராட்டி, இவ்வாறான இளைஞர்களை ஊக்குவித்து, மாவட்டங்கள் தோறும் இவ்வாறான பொறியியல், தொழில் நுட்பவியல் இளைஞர்களை இணைத்து வேலைத்திட்டங்களை உருவாக்குவதன்மூலம், தவறான வழிக்குச்செல்லவிடாது, தடுப்பதோடு ,பொருளாதார அபிவிருத்தி நோக்கிய வெற்றிப்பயணம் ஒன்றை இளைஞர்களுக்கு உருவாக்குவதற்கான , முதல்கட்ட பயணம் இது., இந்த பயணத்திற்கு அனைவரது ஒத்துழைப்பும் எமக்கு தேவை. எனவே எமது நிறுவனத்தின்மீது நம்பிக்கையும், அக்கறையும் உள்ள அனைவரையும் இந்த பதிவை உங்களது நண்பர்கள் உறவுனர்களுடன் பகிர்ந்துகொள்ளுமாறு அன்புடனும், உரிமையுடனும் கேட்டுக்கொள்கின்றோம், ஆதரவிற்கு நன்றி.







Powered by Blogger.