யாழ்பல்கலைக்கழக மாணவப்பிரதிநிதிகளினால் நுவரெலியா மாணவர்களுக்கு கல்வி கற்பிப்பு.

மலையக மாணவர்களினதும், ஆசிரியர்களினதும் வேண்டுகோளுக்கு இணங்க, எமது யாழ்பல்கலைக்கழக மாணவப்பிரதிநிதிகளின் அணி மலையகத்தில் தங்கி இருந்து ,10 க்கும் மேற்பட்ட பாடசாலைகளான,

ஆட்லோ தமிழ் மகா வித்தியாலயம், நுவரெலியா,அக்ரபத்தனை தமிழ் வித்தியாலயம்,டயகம தமிழ் மகாவித்தியாலயம், டயகம ஈஸ்ட் தமிழ் வித்தியாலயம், எலமுல்ல தமிழ் வித்தியாலயம் நுவரெலியா,ஹோல்புரூக் தமிழ் மகா வித்தியாலயம் நுவரெலியா,கபரகெல தமிழ் வித்தியாலயம், நுவரெலியா,லோவர் கரன்லி தமிழ் வித்தியாலயம் நுவரெலியா,விக்னேஸ்வரா தமிழ் மகா வித்தியாலயம் ஹேவாஹெட்ட நுவரெலியா, பிரின்ஷஸ் தமிழ் மகா வித்தியாலயம் நுவரெலியா,விவேகானந்தா தமிழ் வித்தியாலயம் நுவரெலியா போன்ற பாடசாலைகளுக்குச்சென்று கருத்தரங்குகளை நிகழ்த்தியதோடு, யாழ் இந்துக்கல்லூரி மாணவர்களின் இந்துவிழி என்ற கணிதபாட புத்தகத்தினை வழங்கியதுடன் , இந்த பாடசாலைகளுக்கு எமது தொடர்ந்த கல்வி தொடர்பான பயணங்கள் இருக்கும் என்பதை தெரிவித்ததோடு , ஏனைய பாடங்களிற்கான நூல்களுடன் மிக விரைவில் மீண்டும் வருவதாக கூறிவந்துள்ளனர், மாணவப்பிரதி நிதிகளின் இந்த பயணம் தொடர்பாக எம்முடன் கலந்துரையாடும்போது, மிகுந்த வேதனையுடனும் கனத்த இதயத்துடனும் திரும்பியதாக கூறினர், கல்விக்காக ஏங்கும் அந்த மாணவர்களுக்கு நாம் ஏதாவது செய்யவேண்டும் என உறுதிபடக்கூறினர்... ஆம் எம்மாணவர்கள் செய்வார்கள் , இது உறுதி.









Powered by Blogger.