திரு .ஐயாத்துரை சிவசாமி ஆசிரியர் அவர்களின் , சுயதொழில் ஊக்குவிப்புத்திட்டத்தின்கீழ் தலா ஒரு இலட்சம் ரூபா நிதியினைப்பெற்ற முயற்சியாளர்கள்.
திரு .ஐயாத்துரை சிவசாமி ஆசிரியர் அவர்களின் , சுயதொழில் ஊக்குவிப்புத்திட்டத்தின்கீழ் தலா ஒரு இலட்சம் ரூபா நிதியினைப்பெற்ற முயற்சியாளர்கள் முறையே...
1 ) அ. ஜேசுதாசன் குரூஸ் , இவர் மன்னாரைச் சேர்ந்தவர் முள்ளந்தண்டுவடம் பாதிக்கப்பட்ட இவருக்கு கடைக்குத்தேவையான பொருட்கள் கொள்வனவுசெய்வதற்காக ஒரு இலட்சம் வழங்கப்பட்டு வியாரம் ஊக்குவிக்கப்பட்டது.
3) திருமதி. சி. கோமதி பெண் தலைமைத்துவ குடும்பம்( இவர் பூ மாலைகள் செய்து விற்பனை செய்பவர், இவரது பூ மாலைத்தொழிலோடு நிகழ்வுகள் செய்யும்போது கதிரைகளையும் கொடுக்கும் பட்சத்தில் வருவாயை உயர்த்திக்கொள்ளலாம் என்ற நோக்கில் 100 கதிரைகள் வாங்கிக்கொடுக்கப்பட்டது..
4) திருமதி நிர்மலாதேவி ( கணவர்பற்று நோயாளி) மீளக்குடியேற்றப்பட்ட தையிட்டியைச் சேர்ந்தவர், இவருக்கு தையலுக்காக கட்டிடம் திருத்தி தையல்பொருட்கள் வாங்கிக்கொடுக்கப்பட்டது.)
5) திருமதி.க. விஜயரூபா தளவாய் மட்டக்களப்பு , பெண்தலைமைத்துவ குடும்பம், இவரது பன்னவேலைப்பொருட்களை விற்பனை செய்வதற்காக , கடை ஒன்றை அமைப்பதற்கான உதவியாக ஒரு இலட்சம் ரூபா வழங்கப்பட்டது.
மேற்படி முயற்சியாளர்களுக்கான நிதியானது, மாணவப்பிரதிநிதிகளுக்கூடாக வழங்கப்பட்டு, ஆலோசனைகளுடன் மேற்பார்வையும் செய்யப்பட்டுவருகின்றது..இத்திட்டத்திற்கா நிதிப்பங்களிப்புசெய்யும் திரு. சி. பிறேம் அவர்களுக்கு இதய பூர்வ நன்றிகளை முயற்சியாளர்கள் சார்பிலும், எமது நிறுவனம் சார்பிலும் தெரிவித்துக்கொள்கின்றோம்..