திரு. ஐயாத்துரை சிவசாமி ஆசிரியர் அவர்களின், “ ஒரு குடும்பம் ஒரு இலட்சம்” சுயதொழில் ஊக்குவிப்புத்திட்டம்.
மதிப்பிற்கும், அன்பிற்குமுரிய திரு. ஐயாத்துரை சிவசாமி ஆசிரியர் அவர்களின், “ ஒரு குடும்பம் ஒரு இலட்சம்” சுயதொழில் ஊக்குவிப்புத்திட்டத்தின் கீழ் பயன்பெற்ற முயற்சியாளர்களின் விபரங்களாவன..
1) க. சிவானந்தன் மூங்கிலாறு ( விழிப்புலன் அற்றவர், இவரிற்கு விவசாயம் மற்றும் ஆடு வளர்ப்புக்காக வழங்கப்பட்டது)
2) ச. நிருபா காங்கேசன்துறை (முள்ளந்தண்டு பாதிக்கப்பட்டவர், பெண்தலைமைத்துவ குடும்பம், கோழிக்கூடு அமைப்பதற்கும், ஆடு வளர்ப்பிற்குமாக வழங்கப்பட்டது)
4)கு. ரசிகலா உடையார்கட்டு ( பெண்தலைமைத்துவகுடும்பம், தையலை விருத்தி செய்வதற்கு தேவையானவற்றை கொள்வனவு செய்வதற்காக வழங்கப்பட்டது.)
5) சிவசாந்தினி உழவனூர் ( பெண்தலைமைத்துவகுடும்பம் , இவரது வேண்டுகோளுக்கு இணங்க தையல் உபகரணங்களுக்காக வழங்கப்பட்டது
திரு. ஐயாத்துரை சிவசாமி ஆசிரியர் அவர்களின் சுயதொழில் ஊக்குவிப்புத்திட்டத்தின்மூலம் நிதிகிடைக்கப்பெற்றவர்களை மேற்பார்வை செய்து, நெறிப்படுத்திய எமது நிறுவனத்தின் நிர்வாகப்பிரிவைச்சேர்ந்த யாழ் பல்கலைக்கழக மாணவி சத்தியாவிற்கு பாராட்டுக்களும் நன்றிகளும் , ஏழைகள் வாழ்வில் ஒளியேற்றவேண்டுமென, மக்கள் நலன் கருதி எமக்கு நிதிப்பங்களிப்பு செய்துவரும் திரு. சி. பிறேம் அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகளை நிறுவனத்தின் சார்பிலும், பயன்பெற்ற முயற்சியாளர்கள் சார்பிலும் தெரிவித்துக்கொள்கின்றோம்.