மீள் குடியேறும் மக்களுக்கு தொழில்வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்தல்.
30 வருட போரில் காணாமல்போன தையிட்டி என்ற கிராமமானது , உயர்பாதுகாப்பு வலயத்தில் இருந்து ,இப்போது மக்கள் பாவனைக்காக விடுவித்தபோதும், மக்கள் பலகாரணங்களால் மீள்குடியேறுவதில் தயக்கமும், தாமதமும் காட்டிவருகின்றனர். இந்த கிராமத்தில் பெரும்பாலான குடும்பங்கள் விவசாயத்தை மட்டுமே நம்பி வாழ்ந்திருந்தனர், செழிப்பான தேசம் காடாகி இருப்பதால் மனமுடைந்து போன மக்களை உற்சாகப்படுத்தி, ஊக்கப்படுத்தி மீள் குடியேற்றத்தை துரிதப்படுத்தும் நோக்கிலும், மீள் குடியேறும் மக்களுக்கு தொழில்வாய்ப்பை ஏற்படுத்தி கொடுக்கும் நோக்கிலும் புதிய வாழ்வு நிறுவனமானது சில நடவடிக்கைகளை எடுத்துவருகின்றது, அந்த வகையில் ரவீந்திரன் என்பவரது காணியை துப்பரவு செய்து விவசாயம் செய்வற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டு வெற்றிகண்டும் உள்ளது. இவை தொடரும்.....