சிவசாமி ஆசிரியர் அவர்களின் சுயதொழில் ஊக்குவிப்புதிட்டத்தின்கீழ் ஒரு இலட்ச ரூபா உதவி.
“ பயன்தூக்கார் செய்த உதவி நயன்தூக்கின் நன்மை கடலின் பெரிது.”
அன்பிற்கும் பெருமதிப்பிற்குமுரிய திரு. ஐயாத்துரை சிவசாமி ஆசிரியர் அவர்களின் சுயதொழில் ஊக்குவிப்புதிட்டத்தின்கீழ் ஒரு இலட்ச ரூபா உதவியைப்பெறுகின்றார் செங்கலடி மட்டக்களப்பைச்சேர்ந்த திரு கிருஸ்ணபிள்ளை அவர்கள் ,விவசாயம் செய்வதன்மூலம் தன்குடும்பத்தை தன்னால் பார்க்கமுடியும் என நம்பிக்கை தெரிவித்திருக்கின்றார், இரு கைகளையும் இழந்த போதும், நம்பிக்கை என்ற ஒருகையோடு துணிய்து வேலைகளை ஆரம்பித்த கிருஸ்ணபிள்ளையை பாராட்டுவதோடு, வெற்றிபெறவும் வாழ்த்துகின்றோம், இத்திட்டத்தை மேற்பார்வை செய்யும் கிழக்கு பல்கலைக்கழக மாணவப்பிரதிநிதி புவிராஜ் இற்கு நன்றிகளும் பாராட்டுக்களும். இத்திட்டத்தின் கீழ் நூறு குடும்பங்கள் பயன்பெற உள்ளன, பயன்பெறும் குடும்பங்களாவன விசேட தேவை உடைய குடம்பங்கள், பெண்தலைமைத்துவ குடும்பங்கள் , விவசாயத்தில் அக்கறையும் ,அனுபவமும் உள்ள வறுமையான குடும்பங்கள்.இதற்கான நிதியினை திரு . சிவசாமி ஆசிரியர் அவர்களின் மகன் பிறேம் எமக்குதந்துதவுகின்றார். நன்றிகள் பலகோடி திரு சிவசாமி ஆசிரியர் அவர்களின் குடும்பத்தினரிற்கும் பிறேமிற்கும்.