கனடா நாட்டு பிரதிநிதி திருமதி. சௌதா துஸ்யந்தன் அவர்கள் பெண்தலைமைத்துவ குடும்பம் ஒன்றிற்கு வாழ்வாதாரமாக கோழிக்கூடு வழங்கல்.
எமது புதிய வாழ்வு நிறுவனத்தின் கனடா நாட்டு பிரதிநிதி திருமதி. சௌதா துஸ்யந்தன் அவர்கள் பெண்தலைமைத்துவ குடும்பம் ஒன்றிற்கு வாழ்வாதாரமாக கோழிக்கூடு ஒன்றை ஏற்பாடு செய்து கொடுத்ததோடு, தாயை இளந்து தவிக்கும் மூன்று பெண்குழந்தைகளைக்கொண்ட வறுமைக்கோண்டிற்கு கீழ் உள்ள குடும்பம் ஒன்றின் ,குழந்தைகளுக்கு தேவையான கற்றல் உபகரணங்கள், உடைகள், மற்றும் குழந்தைகள் ஆவலாக கேட்டுக்கொண்ட அனைத்தையும் ஒரு தாய்மனதோடு அந்த குடும்பத்திற்கு அனுப்பி வைத்துள்ளார் என்பதை தெரிவிப்பதில் பெருமை அடைகின்றோம் , நன்றி சௌதா உங்களின் மனம்தளராத தொடர்சேவைக்கும், ஆதரவிற்கும்.இந்த சேவையைச் செய்வதற்கு கைகொடுத்த மட்டக்களப்பைச்சேர்ந்த எமது மாணவப்பிரதிநிதி விஜி & முல்லைத்தீவைச்சேர்ந்த மாணவப்பிரதிநிதி பிரசாந்திற்கும் மனமார்ந்த நன்றிகளும் பாராட்டுக்களும்.