திரு ஐயாத்துரை சிவசாமி ஆசிரியர் அவர்களின் ஒரு குடும்பம் ஒரு இலட்சம் சுயதொழில் ஊக்குவிப்புத்திட்டத்தின்கீழ் பயன் பெறும் முயற்சியாளர்கள்.
திரு ஐயாத்துரை சிவசாமி ஆசிரியர் அவர்களின் ஒரு குடும்பம் ஒரு இலட்சம் சுயதொழில் ஊக்குவிப்புத்திட்டத்தின்கீழ் பயன் பெறும் முயற்சியாளர்கள் முறையே...
1) திருமதி. வி. ஜெயசித்ரா புதுக்குடியிருப்பு( கணவன் ஒரு கண்பார்வையை முற்றாக இழந்தவர் ) துணியில் பற்றிக் சாயம் போடும் முறையை நன்கு கற்றுக்கொண்டவர் இவரையும் இவருடன் இணைந்த இரு பெண்தலைமைத்துவ குடும்ப பெண்களை இணைத்து ஒரு குழுமுயற்சியை உருவாக்கும் நோக்கில் தலா ஒரு இலட்சம் வீதம் மூவருக்கும் வழங்கப்பட்டது, ஏனைய இரு பெண்முயற்சியாளர்களின் பெயர்களாவன
2) ஜீ. வக்சலா ( புதுக்குடியிருப்பு பெண்தலைமைத்துவ குடும்பம்)
3) S. சண்முகப்பிரியா ( புதுக்குடியிருப்பு பெண்தலைமைத்துவகுடும்பம்)
4) ஜோ. கினோசன் ( பளை முள்ளந்தண்டுவடம் பாதிக்கப்பட்டவர்.. ) இவரது தேவைகளைப்பூர்த்தி செய்யவும் , விவசாய நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் இவரது வேண்டுகோழுக்கு அமைவாக குழாய்கிணறு வெட்டப்பட்டு மேலதிக வேலைகள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன.
5) திருமதி. ச. ஜெயசாந்தினி (வாழைச்சேனை ) பெண்தலைமைத்துவ குடும்பம் இவர்களுக்கு தெருவோரம் உணவுக் கடை அமைப்பதற்காக நிதி வழங்கப்பட்டது,மாணவப்பிரதிநிதிகளின் மேற்பார்வையில் வேலைகள் நடைபெற்றுக்கொண்டு இருக்கின்றன்.கஸ்ரப்படும் குடும்பங்களுக்கு கைகொடுக்கும் நோக்கில் திரு.சிவசாமி ஆசிரியரின் மகனான திரு. பிறேம் அவர்களின் இந்திட்டமானது, பெரு மதிப்பிற்கும், வணக்கத்திற்குமுரிய மனிதநேயப்பணியாகும், திரு. பிறேம் அவர்களுக்கும் , திரு. சிவசாமி ஆசிரியர் குடும்பத்திற்கும், முயற்சியாளர்கள் சார்பிலும், எமது நிறுவனம் சார்பிலும் மனம் நிறைந்த நன்றிகளைத்தெருவித்துக்கொள்கின்றோம்.