திரு. ஐயாத்துரை சிவசாமி ஆசிரியர் அவர்களின் சுயதொழில் ஊக்குவிப்புத்திட்டத்தின் கீழ், ஒரு இலட்சம் ரூபா நிதியினைப்பெற்ற முயற்சியாளர்கள்.
மதிப்பிற்கும் பெருமைக்குமுரிய திரு. ஐயாத்துரை சிவசாமி ஆசிரியர் அவர்களின் சுயதொழில் ஊக்குவிப்புத்திட்டத்தின் கீழ், ஒரு இலட்சம் ரூபா நிதியினைப்பெற்ற முயற்சியாளர்கள் முறையே..
1) கிளிநொச்சியைச்சேர்ந்த திரு.சு.செல்வகுமார்( இவரது கால்கள் விபத்தில் பாதிப்புக்குள்ளானது, இவர்கேட்டுக்கொண்டதற்கு அமைவாக, கட்டிடத்திற்கு தேவையான சீமெந்துக்கற்கள் அரிவதற்கான உதவிக்காகவும், கோழிக்கூடு அமைப்பதற்காகவும், ஒரு இலட்சம் வழங்கப்பட்டது)
3) ஒட்டிசுட்டானைச்சேர்ந்த மகாதேவன் ( இவர் போரில் ஒரு காலை இழந்ததுடன், மற்றைய காலும் பாதிப்புக்குள்ளானவர், இவரின் காணியில் குளம் இருப்பதால் மீன் வளர்ப்பை ஊக்குவிக்கும்நோக்கில் ஒரு இலட்சம்ரூபா வழங்கப்பட்டது)
4) மீள்குடியேற்றப்பகுதியான தையிட்டியைச்சேர்ந்த திரு. க.சிவகுமாரன் ( இவர் விபத்தினால் கைகள், கால்கள் அனைத்தும் செயல் இழந்த நிலையில் இருந்தாலும் ஒரு பணியாளரை அமர்த்தி, தொலைபேசிக்கான தொகை மீள்நிரப்பல், மின்சாரகட்டணம் என்பவற்றை தொழில்நுட்பத்தை பயன்படுத்தி செலுத்திவருகின்றார், இவரை ஊக்குவிக்கும் நோக்கில் இவருக்கு ஒரு இலட்சம் ரூபா வழங்கப்பட்டது)
5) புதுக்குடியிருப்பைச்சேர்ந்த அ. அன்னமலர் ( இவர் பெண்தலைமைத்துவகுடும்பம், இவரிடம் இருந்த அரிசி அரைக்கும் இயந்திரம் பழுதடைந்த நிலையில் இலுந்ததால் அவற்றை திருத்துவதற்கும், மேலதிகமாக பொருட்களை கொள்வனவு செய்து முன்னேறுவதற்காகவும் ஒரு இலட்சம் ரூபா வழங்கப்பட்டது)
இந்த முயற்சியாளர்களுக்கான நிதியினை தாராளமனதோடு தந்துதவிய திரு. சிவசாமி ஆசிரியர் அவர்களின் மகன் திரு.சி. பிறேம் அவர்களுக்கு முயற்சியாளர்கள் சார்பிலும், நிறுவனத்தின் சார்பிலும் இதயபூர்வ நன்றிகளைத் தெருவித்துக்கொள்கின்றோம்.