மதிப்பிற்கும் பெருமைக்குமுரிய திரு. ஐயாத்துரை சிவசாமி ஆசிரியர் அவர்களின் சுயதொழில் ஊக்குவிப்புத்திட்டத்தின் கீழ் பயன்பெறும் முயற்சியாளர்கள்.
மதிப்பிற்கும் பெருமைக்குமுரிய திரு. ஐயாத்துரை சிவசாமி ஆசிரியர் அவர்களின் சுயதொழில் ஊக்குவிப்புத்திட்டத்தின் கீழ் பயன்பெறும் முயற்சியாளர்கள் முறையே.
1)திருமதி .தே. சிவவதனி இவர் ஒரு பெண்தலைமைக்குடும்பம் என்பதோடு, இவரது கையும் பாதிக்கப்பட்டு, மீள்கை பொருத்தப்பட்ட போதிலும் கடும்முயற்சியால் முன்னுக்குவரத்துடிப்பவர்,இவருக்கு உணவுகள் தயாரித்து விற்பனைசெய்வதற்கும், கோழிக்கூடு அமைப்பதற்காகவும் ஒரு இலட்சம் ரூபா வழங்கப்பட்டது.
3)திரு.க.விஸ்வலிங்கம் இவர் வள்ளிபுனம் புதுக்குடியிருப்பைச் சேர்ந்தவர், கண்பார்வையை முற்றாக இழந்தபோதும் மனைவியின் துணையோடு சிறிய கடை ஒன்றை நடாத்தி வருகின்றார், அந்தக்கடைக்கு தேவையான பொருட்களைக்கொள்வனவு செய்வதற்காக ஒரு இலட்சம்ரூபா வழங்கப்பட்டது.
4)திருமதி. ந. யோகேஸ்வரி இவர் முல்லைத்தீவைச்சேர்ந்த பெண்தலைமைத்துவகுடும்பம், இவர்கள் வாழ்வாதாரமாக விவசாயத்தை நம்பி இருப்பவர்கள், எனவே அவர்களின் விவசாய நடவடிக்கைகளுக்காக ஒரு இலட்சம்ரூபா வழங்கப்பட்டது.
5)திருமதி. ஜெ. மேரிடிலக்சனா, வண்ணாங்குளம் முல்லைத்தீவைச்சேர்ந்த பெண்தலைமைத்துவகுடும்பம், இவர் தையல்மூலமே தனது வாழ்வாதாரத்தை கவனித்து வருகிறார் எனவே, தையலை ஊக்குவிக்கும்நோக்கில் தையல் பொருட்கள் வாங்குவதற்காக ஒரு இலட்சம் ரூபா வழங்கப்பட்டது.
இந்த சுயதொழில் ஊக்குவிப்பு திட்டத்தின்மூலம் ஒவ்வொருகுடும்பமும் தங்களைப்பலப்படுத்தி தன்னிறைவு அடையவேண்டும் என்ற திரு. சிவசாமி ஆசிரியர் அவர்களின் அன்புமகனான பிறேமின் கனவை நனவாக்க எமது மாணவப்பிரதிநிதிகள், கடும்முயற்சி செய்து மேற்பார்வை செய்துவருகின்றனர். இத்திட்டத்திற்கு தொடர்ந்து உதவிவரும் திரு. சி.பிறேமிற்கு முயற்சியாளர்கள் சார்பிலும், மாணவப்பிரதிநிதிகள் சார்பிலும், எமது நிறுவனத்தின் சார்பிலும் அன்பையும், நன்றிகளையும் தெருவித்துக்கொள்கின்றோம்.