மல்லாகம் ஸ்ரார் விளையாட்டுக்கழகத்தின் ஏற்பாட்டில், இடம்பெற்ற மென்பந்து துடுப்பாட்ட சுற்றுப்போட்டி.
மல்லாகம் ஸ்ரார் விளையாட்டுக்கழகத்தின் ஏற்பாட்டில், இடம்பெற்ற மென்பந்து துடுப்பாட்ட சுற்றுப்போட்டியில், மல்லாகம் பைற்றஸ் அணியினர் வெற்றியை தமதாக்கிக்கொண்டனர், சுறுசுறுப்பான இளம் சமுதாயத்தை உருவாக்கும் நோக்கிலும், இளைஞோர்கள் தவறான வழியில் செல்வதை தடுத்து ஆக்கபூர்வமாக சிந்திக்கவைக்கவும் செயல்பட வைக்கவும், எமது பல்கலைக்கழக மாணவப்பிரதிநிதிகள் எடுக்கும் முயற்சிகளில் இதுவும் ஒன்றாகும், இந்த நிகழ்வில் பிரதமவிருந்தினராக கலந்துகொண்ட வலி வடக்கு தவிசாளர் கௌரவ சோ. சுகிர்தன் அவர்கள் இந்த வீரர்களுக்கான நிரந்தர விளையாட்டு மைதானம் ஒன்றை மிகவிரைவில் பெற்றுத்தருவதாக உறுதி கூறி இருந்தார், மனம் நிறைந்த நன்றிகளையும், பாராட்டுக்களையும் நிறுவனம் சார்ந்தும், விளையாட்டு வீரர்கள் சார்ந்தும் தெருவித்துக்கொள்கின்றோம்.இந்த நிகழ்வை சிறப்பாக நடாத்திய மல்லாகம் ஸ்ரார் கழகத்திற்கு பாராட்டுக்கள்.