திரு. ஐயாத்துரை சிவசாமி ஆசிரியர் அவர்களின் மூன்றாம், நான்காம், ஐந்தாம் கொடுப்பனவுகள்.
“ செய்யாமல் செய்த உதவிக்கு வையகமும் வானகமும் ஆற்றல் அரிது”
திரு. ஐயாத்துரை சிவசாமி ஆசிரியர் அவர்களின் மூன்றாம், நான்காம், ஐந்தாம் கொடுப்பனவானது,
1) திரு . இ. ரகுபதிதாஸ் ( விழிப்புலன் அற்றவர் , ஊர்காவற்துறை)
3) திரு.சசிகரன் ( வாய் பேசமுடியாதவர் சரவணை)
ஆகியோர் தலா ஒரு இலட்சம் ரூபாவினை பெற்று, தமது சுயதொழில்களான கோழிவளர்ப்பு, அசோலா வளர்ப்பு , மேலதிக கோழிகள், தீவனம் போன்றவற்றை பெற்று, மிக உற்சாகமாக தொழிலில் ஈடுபடுவதோடு, சசிகரன் என்பவர் நிகழ்வுகள் நடாத்துவதற்கான ஒலிபெருக்கியையும் அதற்கு தேவையான பொருட்களையும் பெற்று மனைவியின் துணையுடன் முயற்சிகளில் ஈடுபடுகின்றார் என்பதை கூறிக்கொள்வதில் மகிழ்வடைகின்றோம் , உதவியைப் பெற்றுக்கொண்ட குடும்பங்கள் , உதவியை வழங்கிய திரு.சிவசாமி ஆசிரியர் குடும்பத்திற்கு நன்றிகளையும், பாராட்டுக்களையும் தெரிவித்துள்ளனர். இவ்வாறாக உதவிசெய்யும் நல்லதொரு சந்தர்ப்பத்தை எமது நிறுவனத்திற்கு வழங்கிய திரு. சிவசாமி ஆசிரியரின் மகன் திரு .பிறேம் அவர்களுக்கு இதய பூர்வநன்றிகளைத்தெரிவிப்பதில் பெருமிதம் அடைகின்றோம்.