மீளகுடியேற மக்களிற்கு ஊக்கம் கொடுக்கும் வகையில் தையிட்டி ஸ்ரார் விளையாட்டுக்கழக வீர்ரர்களும் இணைந்து நடாத்திய தைப்பொங்கல் நிகழ்வு.

 28 வருடங்களாக உயர்பாதுகாப்பு வலயமாக இருந்த தையிட்டி கிராமம், தற்போது மக்கள் பாவனைக்கு விடப்பட்ட போதும் போதிய வசதிகள் இன்றி, சுற்றிலும் பற்றைக்காடுகளாக இருப்பதாலும், வீடுகள் உடைந்து அழிவடைந்த நிலையில் இருப்பதாலும் , மீளகுடியேற மக்கள் அஞ்சுகின்றனர். இந்நிலையில் குடியேறி உள்ள மக்களை சந்தித்து, அவர்களின் தேவைகளை கண்டறிந்து அவர்களுக்கு ஊக்கம் கொடுத்து வாழ்க்கையில் நம்பிக்கையை கொடுக்குமுகமாக, எமது பல்கலைக்கழக மாணவப்பிரதிநிதிகளும், தையிட்டி ஸ்ரார் விளையாட்டுக்கழக வீர்ரர்களும் இணைந்து நாதவலை கோவிலில் பொங்கல் நிகழ்வு ஒன்றை நடத்தி இருந்தனர். மக்களுடன் ஒன்று கூடி சில தீர்மானங்களையும் எடுத்திருந்தனர். அந்த வகையில் இந்த மீள்குடியேறிய மக்களுக்கு சுயதொழில் ஊக்குவிப்பிற்கு கைகொடுக்கவிரும்புவோர், எம்மோடு கைகோருங்கள்.








Powered by Blogger.