சுயதொழில் ஊக்குவிப்பில் வெற்றி கண்டவர்கள்: ஐயாத்துரை சிவசாமி ஆசிரியரின் உன்னத உதவித்திட்டம்
புதிய வாழ்வு நிறுவனத்தின் சுயதொழில் ஊக்குவிப்புத்திட்டத்தின் கீழ், பல்வேறு திறமை வாய்ந்த முயற்சியாளர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதில் திரு. ஐயாத்துரை சிவசாமி ஆசிரியர் அவர்கள் வழங்கிய ஆதரவு குறிப்பிடத்தக்கது.

1) திருமதி. நேசராசா சுகந்தினி: மன்னார் முருங்கனை சேர்ந்த இவர் தையல் பயிற்சியில் திறமை அடைந்து, தொழில் முயற்சியில் வெற்றி கண்டுள்ளார். அவருக்காக ஒரு இலட்சம் ரூபா உதவி வழங்கப்பட்டது.
2) திரு. அ. சாந்தகுமார்: சிதம்பரபுரம் வவுனியாவை சேர்ந்த இவரின் கடை முயற்சிக்கு ஒரு இலட்சம் ரூபா வழங்கப்பட்டுள்ளது.
3) திருமதி. அ. வனிதாமணி: கணனித்துறையில் திறமை வாய்ந்த கரவெட்டி பகுதியை சேர்ந்த இவருக்கு ஒரு இலட்சம் ரூபா உதவி வழங்கப்பட்டது.
4) சி. சுமதி: பண்டத்தரிப்பை சேர்ந்த இவர் தையல் மற்றும் தோட்ட வேலைகளில் மேம்படவும் ஒரு இலட்சம் ரூபா உதவி பெற்றுள்ளார்.
5) திரு. கந்தையா கனகரூபன்: விவசாயத்தில் ஆர்வம் கொண்ட இவருக்கு ஒரு இலட்சம் ரூபா வழங்கப்பட்டது.
எமது திட்டத்திற்கு பங்காற்றிய திரு. சி. பிறேம் மற்றும் மற்ற அனைவருக்கும் எமது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம்.