கோமத்தலாமடு கிராமத்தில் புதிய கல்வி நிலையம் திறக்கப்பட்டது – கல்வி முன்னேற்றத்திற்கு முன்னணி செயல்பாடுகள்
எமது நிறுவனத்தின் கல்விசார் முன்னேற்ற செயல்பாடுகளின்கீழ், மட்டக்களப்பு மாவட்டத்தில் கோமத்தலாமடு எனும் கிராமத்தில் ,பிரத்தியேக கல்வி நிலையம் ஒன்று எமது கிழக்கு பல்கலைக்கழகமாணவப்பிரதிநிதி திரு.த. பரஸ்காந் தலைமயியில் திறந்துவைக்கப்பட்டது.இத்திட்டத்திற்கான நிதிப்பங்களிப்பை புதிய வாழ்வு நிறுவனத்தின் இயக்குனர்களில் ஒருவரான , திருமதி. சௌதா துஸ்யந்தன் அவர்களால் தனது தந்தையின் ஞாபகார்த்தமாக வழங்கப்பட்டிருந்தது. எமது நிறுவனத்துடன் இணைந்து பலசெயல்திட்டங்களிற்கு நிதிப்பங்களிப்புச்செய்து, திட்டங்களை வெற்றியடையவைக்கும் வளர்ந்துவரும் தொழிலதிபர் திருமதி. சௌதா துஸ்யந்தன் அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகளும் பாராட்டுக்களும்👏👏.
இந்நிகழ்விற்கு அதிதிகளாக கலந்து சிறப்பித்து வாழ்த்துத்தெருவித்த, அனைத்து பாடசாலை அதிபர்கள், அரசஅதிகாரிகள், அபிவிருத்தி சங்கத்தலைவர்கள், மற்றும் எம்மோடு இணைந்து மிக சுறுசுறுப்பாக செயலபட்ட சிறார்கள், மாணவர்கள், கோமத்தலாமடு அன்பான மக்கள் அனைவருக்கும் எமது இதயபூர்வ நன்றிகளைத்தெருவித்துக்கொள்கின்றோம்.
மிகப்பற்றுதலோடு தனது கிராமம் முன்னேற வேண்டும் என்ற நோக்கில், தன்னை அர்ப்பணித்து இந்த வேலைத்திட்டத்தை திறம்பட முடித்த எமது மாணவப்பிரதிநிதி திரு. த. பரஸ்காந்திற்கு மனமார்ந்த நன்றிகள். 🙏