சாதனை வீரர்கள்: விவசாயத்தில் முன்னேற்றம் – வத்தகப்பழ விற்பனையிலும் பெண்தலைமைத்துவ வேலைவாய்ப்பிலும் வெற்றியுடன்
எமது நிறுவனத்தின் சாதனை வீரர்களான, திரு. வி. ஜேதுஜன் & திரு. வி. கேதீஸ் ஆபியோர் தலைமையில் மேற்கொள்ளப்படும் விவசாய நடவடிக்கைகளில், முதல் முயற்சியாக இன்றைய நாளான 28/07/21 இல் வத்தகப்பழம் 1500 கிலோகளை காகீல்ஸ் நிறுவனத்திற்கு விற்பனை செய்து எமது நிறுவனத்திற்கு வருவாயையும், பெண்தலைமைத்துவ குடும்பப்பெண்களுக்கு வேலைவாய்ப்பையும் கொடுத்து, எமது நிறுவனத்திற்கு பெருமையையும் தேடித்தந்துள்ளனர்.
இவர்கள் போன்று ஏனைய இளைஞர்களும் நாட்டின் பொருளாதாரத்தைத்தையும், வாழ்வாதாரத்தையும் உயர்த்த முன்வரவேண்டும் என கேட்டுக்கொள்கின்றோம். சாதிப்பதற்கு வயது தேவையில்லை நல்ல சிந்தனையே போதுமானது என்பதனை எம் இளைஞர்கள் நிரூபித்துள்ளனர்.
வாழ்த்துக்களும், நன்றிகளும் எமது இளைஞர்கள் அணிக்கு.