சுயதொழில் முயற்சியாளர்களுக்கு உதவிய ஒரு புனித முயற்சி – ஒரு குடும்பம் ஒரு லட்சம் உதவித்திட்டம்

“செய்யாமல் செய்த உதவிக்கு வையகமும் வானகமும் ஆற்றல் அரிது”

திரு. ஐயாத்துரை சிவசாமி ஆசிரியர் அவர்களின் சுயதொழில் ஊக்குவிப்புத்திட்டத்தின் கீழ் இதுவரை 50 முயற்சியாளர்கள் பயன்பெற்று, வாழ்க்கைத்தரத்தை உயர்த்தியுள்ளனர் என்பதை மிக மகிழ்வோடு தெரிவிக்கின்றோம். தாம் தம்மை நம்பி வாழ்வதற்கு ஏற்றவாறான அறிவுரைகளையும், மேற்பார்வைகளையும் எமது மாணவ பிரதிநிதிகள் செவ்வனே செய்துவருகின்றனர்.

அந்த வகையில், நலிவடைந்த மக்களுக்கு கைகொடுத்து, மக்கள் மனங்களில் வாழும் திரு. ஐயாத்துரை சிவசாமி ஆசிரியர் அவர்களை சிரம் தாழ்த்தி வாழ்த்துவதோடு, இந்த பெரியளவிலான நிதியை எமக்கு தந்துதவிய திரு. சிவசாமி பிறேம் அவர்களுக்கு முயற்சியாளர்கள் சார்பிலும், நிர்வாகக்குழுவான பல்கலைக்கழக மாணவ பிரதிநிதிகள் சார்பிலும், எமது நிறுவனம் சார்பிலும் இதயம் நிறைந்த நன்றிகளை தெரிவிக்கின்றோம். 🙏🙏

அடுத்து பயன் பெறும் முயற்சியாளர்கள் முறையே:

  1. செல்வி. ச. சுஜிதா: இவர் முள்ளந்தண்டுவடம் பாதிக்கப்பட்டவர் மற்றும் எமது பராமரிப்பு இல்லத்தில் இருக்கும் மிகவும் சுறுசுறுப்பானவர். இவருக்கு கைவினைப்பொருட்களை செய்வதன் மூலம் இலாபம் ஈட்டுவதற்காக ஒரு இலட்சம் ரூபா வழங்கப்பட்டது.
  2. திருமதி S. சாந்தகுமாரி: இவரின் மகன் முள்ளந்தண்டுவடம் பாதிக்கப்பட்ட நிலையில் எமது பராமரிப்பு இல்லத்தில் தங்கி இருக்கிறார். அவரின் தாயாருக்கு கோழி வளர்ப்பிற்காகவும், தையல் தொழில்மூலம் வருவாயை ஈட்டுவதற்காகவும் ஒரு இலட்சம் ரூபா வழங்கப்பட்டது.
  3. திரு. சு. துஸ்யந்தன்: இவர் முள்ளந்தண்டுவடம் பாதிக்கப்பட்டவர். இவரின் வருவாயை கூட்டும் நோக்கில் கோழிக்கூட்டைப் பாதுகாப்பதற்காக சுற்றிய வேலியும், அசோலா வளர்ப்பிற்கான ஏற்பாடுகளும் செய்வதற்காக ஒரு இலட்சம் ரூபா வழங்கப்பட்டது.
  4. திருமதி சு. அருந்ததி: இவர் பெண்தலைமைத்துவ குடும்பம். இவரின் வாழ்வாதார முயற்சியாக ஆடு வளர்ப்பை ஊக்குவிக்கும் நோக்கில் ஒரு இலட்சம் ரூபா வழங்கப்பட்டது.
  5. திரு. சி. மேகநாதன்: இவர் ஒரு கையை இழந்த போதும் விவசாயத்தில் ஆர்வம் உள்ளவர். இவருக்கு ஒரு கொட்டில் அமைத்து விவசாய நடவடிக்கைகளை ஊக்குவிப்பதற்காக ஒரு இலட்சம் ரூபா வழங்கப்பட்டது.

அனைத்து முயற்சியாளர்களும் பயன்பெற்று, வாழ்வில் உயர்ந்த நிலையை அடைய வாழ்த்துவதோடு, இவ்வாறு பாதிக்கப்பட்ட மக்களுக்கு கைகொடுக்கும் இந்த உன்னதமான பணிக்கு நிதி வழங்கிவரும் இந்த மக்களின் நாயகனை எமது மக்கள் அனைவரது பார்வைக்கும் கொண்டுசெல்லவும், மனதார மக்கள் வாழ்த்துவதற்கும் இந்த பதிவை உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் பகிர்ந்துகொள்ளுமாறு உரிமையுடன் கேட்டுக்கொள்கின்றோம்.






Powered by Blogger.