மன்னார் மாவட்டத்தில் ஒரு சிறந்த முயற்சியாளனுக்கு புதிய வாழ்வு நிறுவனம் அளித்த அர்ப்பணிப்பு

மன்னார் மாவட்டத்தில் தோட்டவெளி எனும் கிராமத்தில் வசிக்கும், திரு. ஜெயக்குமார் என்பவர் ஒரு சிறந்த முயற்சியாளன். எமது மன்னார் மாவட்ட மாணவப்பிரதிநிதிகள் மூலம், அவர் தனது வேண்டுகோளான சக்கர நாற்காலி ஒன்றை கேட்டிருந்தார். அவரது வலிகள் நிறைந்த வாழ்க்கைக்கு உதவியாக, புதிய வாழ்வு நிறுவனம் சக்கர நாற்காலியையும், அவரது பழுதடைந்த மோட்டார் வாகனத்தை திருத்துவதற்கான நிதியையும் வழங்கியது.

இத்திட்டத்திற்கான நிதியை கனடாவில் இருந்து அனுப்பிய திருமதி. கௌரி பாலா அவர்களுக்கு, மாணவப்பிரதிநிதிகள் சார்பிலும், முயற்சியாளன் சார்பிலும், எமது நிறுவனத்தின் சார்பிலும் இதயபூர்வமான நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம்.

மேலும் தகவல்களுக்கும், எமது சமூகப்பணி தொடர்பான தகவல்களை அறியவும், எமது Facebook பக்கத்தை பார்வையிடுங்கள்:

Click Here

Powered by Blogger.