சுயதொழில் ஊக்குவிப்பின் மற்றுமொரு வெற்றிகரமான முயற்சி: Dr. அபிலாசா மற்றும் மாணவர்களின் அர்ப்பணிப்பு
புதிய வாழ்வு நிறுவனத்தின் சுயதொழில் ஊக்குவிப்புத்திட்டத்தின் கீழ், பின்தங்கிய கிராமமான பள்ளிக்குடியிருப்பு தோப்பூர் மக்களின் நலனை முன்னிலைப்படுத்தி ஒரு சிறப்பான திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. Dr. அபிலாசினியின் கனவை நனவாக்கும் நோக்கில் உருவாக்கப்பட்ட இத்திட்டம், சமூக நலனுக்காக புதிய பாதையினை காட்டும் முயற்சியாக திகழ்கிறது.
இந்த திட்டத்தின் முக்கியமான அம்சமாக, அமெரிக்காவில் கல்விகற்றுக்கொண்டிருக்கும் 5 மாணவர்கள் தங்களது பகுதிநேர உழைப்பின் மூலம் இதை வெற்றிகரமாக நிறைவேற்றியுள்ளனர். இது அவர்களின் சமூகப்பற்றையும், அர்ப்பணிப்பையும் காட்டுகிறது. அவர்கள் அனைவருக்கும் எமது நிறுவனத்தின் சார்பாக இதயபூர்வமான நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.
Dr. அபிலாசாவின் சேவை அவரது கிராம மக்களுக்கு மொழி, இன, மத வேறுபாடுகள் இன்றி கிடைக்க வேண்டும் என்பதை உறுதியாகக் கோருகிறோம். மேலும் தகவல்களுக்கும், இத்திட்டம் தொடர்பான அரிய காட்சிகளுக்கும் எமது Facebook பக்கத்தைப் பார்வையிடுங்கள்!